×

போடியில் புகழ்பெற்ற பரமசிவன் மலைக்கோயிலில் ₹2 கோடியில் அபிவிருத்தி பணிகள் தீவிரம்

*18 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம்

போடி : போடியில் புகழ்பெற்ற தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் பரமசிவன் மலைக்கோயிலில் ரூ. 2 கோடியில் அபிவிருத்தி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று 18 வருடங்களுக்கு பிறகு வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தேனி மாவட்டம், போடி நகருக்கு மேலும் ஆன்மீகத் தோடு வலிமை சேர்க்கும் விதமாக பி.பி.எஸ்.எஸ். ராஜபாண்டிய நாயக் கர் 22வது ஜமீன்தாராக இருந்து ஆட்சி செய்த நேரத்தில் ஊரின் மேற்கு பகுதி குபேர மூலையில் 300 அடிக்கும் மேல் உயரம் கொண்ட மலைக்குன்றில் தியான லிங்கமாக பரமசி வனை பிரதிஷ்டை செய்து கடந்த 1948ம் ஆண்டு அஸ்திவாரம் போடப்பட்டது.
சரியாக ஓராண்டுக்குள் பணிகளை முடித்து தை மாதம் 22ம் தேதி 19 49ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறந்த வழிபாட்டு தலமாக விடப்பட்டது.

பொதுமக்கள் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு செல்ல 250 படிக்கட்டுகளும், கன்னி மூலையில் கணபதியும், நடுவில் தியான லிங்கம் , வடக்கு மூலையில் மீனாட்சியம்மன், லட்சுமி நாராயண பெருமாள் ஆஞ்சநேயர் உட்பட 3 சன்னதிகள் உள்ளன. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோ யிலில் சித்திரை மாதம் 2ம் தேதி துவங்கி 7 நாட்களுக்கு சித்திரை பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதற்காக போடியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் திருவிழாக் கடைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மின் அலங்காரங்களுடன் நடத்தப்படும்.

இக்கோயிலில் கடந்த 2005ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் மலை அடிவாரத்தில் கிரிவல சுற்றுப்பாதை அமைக்கப்பட்டு, தியானலிங்க மாக இருந்த விக்ரகத்தை மாற்றி பத்மலிங்க திரு மேனியாக மாற்றி உயர்ந்த மலையில் மூலஸ்தனத்தில் பிரதிஷ்டை செய்து மாற்றி அமைத்தனர். தற்போது பதினைந்து 18 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இது வரையில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது.

இது குறித்து போடி எம்எல்ஏ ஓ.பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதற்கு ஓபிஎஸ் செவி சாய்க்கவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நட த்தப்பட வேண்டும் என தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ் செல்வனிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அவரும் தீவிர முயற்சி எடுத்து கோ யில் அபிவிருத்தி செய்து கும்பாபி ஷேகம் கட்டாயம் நடத்த வேண்டும் அதற்கான பணிகள் செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவன த்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆணையும் பெறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இந்த பரமசிவன் மலைக்கோயிலில் பாலாயம் செய்து கும்பாபிஷேக அபிவிருத்தி பணிகள் செய்வதற்கு பணிகள் துவக்கப்பட்டது.

அதற்காக ரூ.2 கோடி மதிப்பீட்டில் அரசும், நன் கொடையாளர்களின் து ணையுடன் அபிவிருத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆர்ச்களும் இரண்டு தியா ன மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது.ஏற்கனவே அந்தக் காலத்தில் மீனாட்சியம்மனை மலை அடிவாரத்தில் வைத்துவணங்கி வந்தனர். ஆனால் தற்போது ஐதீக முறைப்படி மீனாட்சியம்மனை மலைக்கு எடுத்துச் சென்று அங்கு தனி சன்னதியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

அங்கே இருந்த நவகிரகத்தை ஐதீக முறைப் படி மலை அடிவாரத்தில் ஈசானி மூ லையில் கொண்டு வந்து தனி சன்னதியாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் கோயிலின் பின்புறம் கிரி வலப்பாதையில் இந்த உயர்ந்த மலைக்கு பக்தர்கள் காரிலே மேலே சென்று 20 கார்கள் நிறுத்தம் அளவிற்கு கோயிலில் பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு நன்றி

ஜமீன்தாரும், அறக்கட்டளை தலைவருமான வடமலை ராஜ்ஜைய பாண்டியன் கூறுகையில், இந்த மலைக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தி 18 ஆண்டுகள் ஆகிறது. 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடந்த வேண்டும் விதி உள்ளது. தீவிர முயற்சியால் தமிழக அரசு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசிற்கு நாங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த 60 வருடமாக தியானலிங்கம் திருமேனியை வழிபாடு செய்து வந்தோம். தற்போது அந்த லிங்கம் ஐதீக முறைப்படி பத்மலிங்கம் திருமேனியாக மாற்றி வழிபாடு செய்து வருவதால் பொதுமக்களுக்கு மேலும் பலன்கள் கிடைக்கும். மலைக்கு காரில் சென்று வழிபாடு செய்யும் வகையில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. என்றார்

ஊர் வளர்ச்சி, மக்கள் மகிழ்ச்சி

ஆன்மீக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், போடி மேற்கு பகுதியில் இரு மாநில எல்லைகள் வருவதால் இப்பகுதி விவசாயம் செழிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஆட்சியில் இருந்த ஜமீன்தார் 1948ம் ஆண்டு இந்த பரமசிவன் மலைக்கோயில் கட்டி முடித்து பொதுமக்கள் அர்ப்பணித்தார். 18 ஆண்டுகள் கும்பாபிஷேகம் நடத் தாமல் இருந்ததால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அரசு மூலமாக அபிவிருத்தி பணிகள் செய்து வருவது வரவேற்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கையால் ஊரும் மேலும் வளர்ச்சியடையும், மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றார்.

The post போடியில் புகழ்பெற்ற பரமசிவன் மலைக்கோயிலில் ₹2 கோடியில் அபிவிருத்தி பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Paramasivan hill temple ,Bodi ,Kumbabhishekam ,South Tiruvannamalai Paramasivan Hill Temple ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...